Friday, April 16, 2010

கிறுக்கியது Kavithai!

நீண்ட நெடுங்காலம் கழித்து மீண்டும் ...
நான் ...
கிறுக்கியது கவிதை! (trademark coming soon:)

வாசித்துப் பாருங்களேன்!!

--------------------------------------------------
இறப்பு வரைதான் இருப்பு!
இந்த இருப்பில் எதற்கு எடுப்பு?

வருகையில் என்ன கொணர்ந்தாய்?
போகையில் எதைக் கொண்டு போவாய்?

இரு வினாக்களிற்கும் விடை ஒன்றுதான்
இதில் இருப்பது உண்மை ஒன்றுதான்

வென்றவர் யார் தோற்றவர் யார்
நீண்டு நிலைத்து நிற்பவர் யார்

முதலில் வந்தவர் யார்? பிறகு சென்றவர் யார்?
கண்டு பிடித்ததெல்லாம் சொல்பவர் யார்?

தாய் தின்ற நிலமே விண்
கலம் சென்ற நிலவே

நீங்களும் நாங்களும் புள்ளிதான் - மிகச் சின்னப் புள்ளிகள் தான்
பிரபஞ்சமோ பெரிய புள்ளிதான்!

நட்பும் காதலும் நடிக்கலாம்
பந்தங்கள் பிணைப்புகள் வெடிக்கலாம்

அசந்து தூங்குபவன் எழுப்பப் படலாம்
நடிப்புத் தூக்கம் கலைய நாளாகும்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு துளிகள் சேர்ந்தே பெரு மழை

உன்னை உணர்ந்தால் இந்த உண்மை புரிந்தால்
உள்ளவரை நீ சிரிக்கலாம் உலகையும் எதிர்த்து நிற்கலாம்

16 April 2010

Thursday, January 1, 2009

வாலி எழுதிய ராமாயணம்

"வாலி எழுதிய ராமாயணம்" - இது கவிஞர் வாலி கவிதை வடிவில் ராமாயணத்தை ஓர் வாரப் பத்திரிகைக்கு எழுதிய முயற்சி. பல ஆண்டுகளிற்கு முன்னர் அவர் இதை சாதித்திருந்தார். அந்த ராமாயணம் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. கவிதையை ரசிக்கச் செய்தது. அனுபவிக்க வைத்தது. அதே போல எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. அது மட்டுமல்ல வாலி மேல் ஒரு மதிப்பையும் ஏற்படுத்தியது.

அதுவரையும் எனக்குத் தெரிந்திருந்த வாலியோ ராமாயணம் எழுதியவரல்ல. வாலியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்த "விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்" அன்றி "வண்ணத் தமிழ்க் குழந்தைக்குப் பாலூட்டும் தாய்" அல்ல. அது வாலியின் தவறல்ல எங்கள் திரைப்பட மோகம். எமது சமூகத்தின் தேவைக்கு ஏற்ப வாலி பாடல் எழுதினார். அன்று MGR கேட்டபடி புரட்சி சொன்ன கவிஞன் இன்று producer சொன்னபடி ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி என்று இந்திர லோகத்துச் சுந்தரிக்கு சொல்லிக் கொடுத்தார்.

அது இருக்கட்டும் விசயத்திற்கு வருகிறேன் :) பல பேருக்கு ராமாயணம் தெரியும் - கமபன் பாடியது, வால்மீகி வரைந்தது, ராஜாஜி செதுக்கியது, தாத்தா, பாட்டி சொன்னது என்று பல விதம் பல பேர் அறிவர். அனைவருக்கும் என் வேண்டுகோள் - வாலி எழுதியதையும் ஒருமுறை வாசித்துப் பாருங்களேன்.

கன்னி முயற்சி

தேங்க்ஸ் டு கூகிள் நான் தமிழ் ப்லோக்கிங் முயற்சியில் இறங்கி உள்ளேன்

உங்களுக்குத் தெரியுமா புகழ் பெற்ற வட இந்திய நடிகர் அமிதாப் பச்சன் ஒரு ப்லோக் நடத்தி வருகின்றார் என்று?
அவருடைய ப்லோகை வாசித்துப் பார்த்த பொழுது
ஒரு பத்திரிக்கை மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது. அது ஒரு தமிழ் பத்திரிக்கை அதிலே ஆங்கிலேயர் எப்படி இந்தியாவை அடிமைப்படுத்துவது என்று தங்களுடைய திட்டத்தை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தது பற்றி ஒரு செய்தி இருந்தது..வாசித்துப் பாருங்களேன்..

Friday, October 29, 2004

view from the futon

பொழுது விடியும் நேரம்
அழுது வடியும் வானம்

இலைகள் மீது
துளைகள் போடும்

மழையின் துளியின் வீரம்
இங்கே கிளைகள் எல்லாம் ஈரம்